“படம் பிரமாதம். கதை ரொம்ப.. அட்டகாசமா இருக்கு.”
“அப்படியா? அப்படி என்ன வித்தியாசமான கதை.”
“ நாட்டில நடக்கிற லஞ்ச, ஊழல் பற்றிதான்.”
“சூப்பர்”
“இலஞ்சம்,ஊழல்,கறுப்புச்சந்தை,கறுப்புப் பணம்,கடத்தல்..... இப்படி எல்லத்தையும் எதிர்த்து நம்ம ஹீரோ கண்ணு சிவக்க, பல்ல கடிச்சிட்டு வசனம் பேச.. தியேட்டரே கைதட்டல்ல அதிருது தெரியுமா?”
“அப்படியா.. கிளைமாக்ஸ் எப்படி?”
“ஊழல் பண்றவன், லஞ்சம் வாங்குறவன், கறுப்பு சந்தையில பணம் சம்பாதிக்கிறவன்..அத்தனை பேரையும் நம்ம ஹீரோ புரட்டி புரட்டி எடுக்கிறாருங்க. இந்த படத்த எல்லாரும் பாக்கணும். ஒரு பய நாட்டில ஊழல் பண்ண மாட்டான்.”
“அப்படியா. அப்ப இந்த படத்தை கண்டிப்பா பார்க்கணுமே. தியேட்டர்ல கூட்டமெல்லாம் எப்படி? டிக்கெட் கிடைக்குமா?”
“எங்க சார் கிடைக்குது. பயங்கர கூட்டம்.தியேட்டர்காரங்களே 20 ரூபா டிக்கெட்ட 50 ரூபாய்க்கு அநியாயமா விக்கிறாங்க. நானே பிளாக்லதான் டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன்னா பாத்துகங்களேன்"
# முதல்ல நம்ம திருந்துவோம் அப்புறம் திருத்துவோம் !!!
- Jayant
0 comments:
Post a Comment